பாதணிகள் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை 5 ஆம் திகதிக்குள் நிறைவடையும் !

by wp_shnn

on Monday, February 03, 2025

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு வவுச்சர்களை விநியோகிக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக 6,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும், குறித்த உதவித்தொகையினை 5 ஆம் திகதிக்குள் செலுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதன் மூலம் சுமார் லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடையவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

250 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாதணி வவுச்சர்கள் வழங்கப்படுவதுடன் அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்