தொடரும் வேட்டை!

by wamdiness

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களிற்கு எதிரான கைது வேட்டை மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மன்னாரில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம்  திங்கட்கிழமை(3) உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில்  அத்துமீறி நுழைந்து  மன்னாருக்கு தெற்கு கடற்பரப்பில் இழுவைப் படகு ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த  இந்திய மீனவர்கள் 10 பேர்  திங்கட்கிழமை(3) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறை கடற்பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு கைதுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.துப்பாக்கி சூட்டில் ஜந்து இந்திய மீனவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்