3
நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு தவறிவிட்டது என கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழலை அளிக்க மத்திய அரசு முற்றிலும் தவறிவிட்டது.
பா.ஜனதா ஆளும் மாநிலங்களில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறுபான்மையினர் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்’ இவ்வாறு கனிமொழி குற்றம் சுமத்தியுள்ளார்.