சட்டவிரோத மதுபான விற்பனையாளார்களிடையே மோதல் – மூவர் உயிரிழப்பு

by wp_shnn

சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நிலவி வந்த முரண் காரணமாக மூவர் படுகொலை செய்யப்பட்டுள்னர் 

அம்பலாந்தோட்டை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான மூவர் உயிரிழந்துள்ளனர் 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சட்ட விரோத மதுபான விற்பனை தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையில் நீண்ட காலமாக முரண்பாடு நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் அடிப்படையில், ஐந்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் 

தொடர்புடைய செய்திகள்