அதீத போதை காரணமாக சுகவீனமுற்ற இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்
திடீர் சுகவீனமுற்ற நிலையில் யாழ் . போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உடற்கூற்று பரிசோதனையில் அதீத போதை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சிறு குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே விடுவிக்கப்பட்டவர் என்றும் , சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நண்பர்களுடன் இணைந்து போதையை நுகர்ந்த நிலையிலையே , அதீத போதை காரணமாக சுகவீனமேற்பட்டது என பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், உயிரிழந்த இளைஞனுடன் சம்பவ தினத்தன்று போதையை நுகர்ந்த ஏனையவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்