கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!

by adminDev

இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு ஏழு கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் பொலிஸ் விசாரணையின் போது திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனங்களின் இயந்திர எண்கள் போலியாக தயாரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் போலியாக தயாரிக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக வாகனங்களை இணைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு பெரும் இழப்பு ஏற்படுவதால், கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்