முன்கூட்டியே வந்து சென்ற சுமந்திரன்!

by sakana1

 நாளை இறுதிநாளில் குழப்பங்களை தவிர்க்க இன்றைய தினமான சனிக்கிழமை சத்தம் சந்தடியின்றி தனது ஆதரவாளர்கள் சகிதம் சுமந்திரன் மாவையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மறைந்த மாவை சேனாதிராஜாவின்  புகழுடலுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன்  இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த 29ஆம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்த மாவை சேனாதிராஜாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மாவையின் புகழுடலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்திவரும் நிலையில் இன்று (01) காலை 7:00 மணியளவில் சுமந்திரன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்