மட்டக்களப்பு – செங்கலடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பணிகள் ஆரம்பம்

by guasw2

மட்டக்களப்பு – செங்கலடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பணிகள் ஆரம்பம் on Saturday, February 01, 2025

(செங்கலடி நிருபர் – சுபஜன்)

மட்டக்களப்பு –  செங்கலடியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பணிகள் ஆரம்பம்

சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக்குதல்  எனும் தொனிப்பொருளில் இன்றைய நாள் கிறீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ்  செங்கலடி பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பொது மயானத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்றன. 

 செங்கலடி பிரதேச சபை செயலாளர் வ.பற்குணன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் சூரியகுமார் பார்த்திபன், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி சி.சசிகுமார், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அமைப்பாளர் கி.திலகநாதன் , ஆகியோருடன் பிரதேச சபை ஊழியர்கள் சுகாதாரத் துறையினர் , சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் , செங்கலடி பொது மயானம் சுத்தம் செய்யப்பட்டது

தொடர்புடைய செய்திகள்