திருகோணமலை நகர் கடற்கரையில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் கடலில் மூழ்கி காணாமற்போன இளைஞனின் சடலம் கண்டெடுப்பு
திருகோணமலை நகர் கடற்கரையில் கடந்த 30 ஆம் திகதி நீராடுவதற்கு நண்பர்களுடன் சென்றிருந்த 20 வயதுடைய இளைஞன், அலையில் சிக்குண்டு காணாமற்போயிருந்தார்.
குறித்த இளைஞன் கடலில் மூழ்கியபோது ஏனையோர் அவரை காப்பாற்ற முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிய குறித்த அனைவரையும் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினர் மீட்டு கரைக்கு கொண்டுவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரை தேடும் பணிகள் கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் கடற்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை – சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.