‘காரம் குறைவு, ருசி அதிகம்’- தெலங்கானாவின் சப்பாட்டா மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற முயலும் விவசாயிகள்
‘காரம் குறைவு, ருசி அதிகம்’- தெலங்கானாவின் சப்பாட்டா மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெற முயலும் விவசாயிகள்
இந்தக் காணொளியில் இருப்பதுதான் ‘தக்காளி மிளகாய்’. இது சப்பாட்டா மிளகாய் என்றும் அழைக்கப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய தெலங்கானாவின் வரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பலடுகுல ராமையா, “1960இல் இருந்து இந்த மிளகாயைப் பயிரிட்டு வருகிறேன். இது எங்கிருந்து வந்தது, முதன்முதலில் எப்போது பயிரிடப்பட்டது என எதுவும் எனக்குத் தெரியாது.”
“இந்தப் பயிர் எனக்கு முன்பு இருந்தே இருக்கிறது. இந்த மிளகாயின் விதை இருக்கிறது. இதை சாகுபடி செய்யும் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அது போகிறது. இதுதான் ‘தக்காளி மிளகாய்’. சப்பாட்டா மிளகாய் என்றும் இது அழைக்கப்படுகிறது” என்கிறார்
ஊறுகாய் தயாரிப்பில், சப்பாட்டா மிளகாய்த் தூள் பரவலாக உள்ளூரில் பயன்படுத்தப்படுகிறது. சப்பாட்டா மிளகாய் வகையின் விதைகள் பாரம்பரிய தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.
சப்பாட்டா மிளகாய் ரகத்துக்கு விரைவில் புவிசார் குறியீடு (ஜிஐ) கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கோண்டா லக்ஷ்மன் பாபுஜி தோட்டக் கலை பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன், திம்மாம்பேட்டையைச் சேர்ந்த விவசாயிகள், சங்கம் அமைத்து புவிசார் குறியீடு பெற விண்ணப்பித்துள்ளனர்.
முழு விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு