by sakana1

விபத்தில் ஒருவர் காயம் மட்டக்களப்பிலிருந்து  தமிழரசு கட்சியின்  மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ஜனா பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து, இன்று (1), திருகோணமலை- உப்புவெளி பிரதேசத்தில் இடம்பெற்றது.

 திருகோணமலை – உப்புவெளி  வீதியின் சர்வோதயத்துக்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவையில் பொதுமக்கள் கடக்கின்ற போது, கருணாகரம் ஜனா பயணித்த வாகனத்தை நிறுத்திய போது பின்னால் அதிகவேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்ட அந்த வாகனத்தின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்