by wamdiness

கொழும்பில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது ! பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பில், கொழும்பு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மபால மாவத்தை பகுதியில்,  ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் நேற்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பொரள்ளை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடம் இருந்து, ஒரு கிலோ 190 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்