கிழக்கில் முன்னாள் ஆளுநரது மோசடிகள் தொடர்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கிலும் விசாணைக்குழுக்கள் அமைப்பது தொடர்பில் கோரிக்கைககள் முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராசா மீது மணல் அகழ்விற்கான அனுமதிக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்றமை மற்றும் அரச வாகனங்களை கோத்தபாயவிற்கு ஒதுக்கியமை தொடர்பிலும் இரணைமடுக்குள கட்டுமானம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் சாள்ஸ் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது.
முன்னதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரின் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவால் மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆளுநர் அலுவலகத்துக்கு கிடைக்கும் அனைத்து எழுத்துப்பூர்வ குற்றச்சாட்டுகளும் விசாரணைக்காக அந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
இந்த மூன்று பேர் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமான் என்பது குறிப்பிடத்தக்கது.