தொலைத்தொடர்பு கம்பிகளை திருடி விற்ற ஐவர் கைது !

by guasw2

தொலைத்தொடர்பு கம்பிகளை திருடி விற்ற ஐவர் கைது ! on Saturday, February 01, 2025

தொலைத்தொடர்பு கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் கொடவில பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில், மாத்தறை, இமதுவ பிரதேசத்தில் வைத்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 34 வயதுக்கு இடைப்பட்ட இமதுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மாத்தறை, மாலிம்பட, அக்குரஸ்ஸ, நெலுவ, இமதுவ, வெலிகம, யக்கலமுல்ல, ஊறுபொக்க, அம்பலாங்கொட மற்றும் அஹங்கம ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தொலைபேசி தொடர்பாடல் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கம்பிகளை இவர்கள் திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட தொலைத்தொடர்பு கம்பிகளில் இருந்து பெறப்பட்ட 228 கிலோ செப்பு வெவ்வேறு இடங்களுக்கு விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் கம்பிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் குறடு, மோட்டார் சைக்கிள் மற்றும் 05 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாாரணைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்