திருகோணமலை ஹபரணை பகுதியில் வாகன விபத்து – நால்வர் பலி ; 25 பேர் படுகாயம்

by wp_shnn

திருகோணமலை ஹபரணை பகுதியில் இன்று சனிக்கிழமை(1) காலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், நால்வர் பலியானதுடன், 25 பயணிகள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை ஹபரணை கத்தரஸ் கொட்டுவ என்னும் பகுதியில் வேன் மற்றும் பஸ் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிண்ணியாவில் இருந்து விமான நிலையத்திற்கு 4 பேரை ஏற்றிச் சென்ற வானும், காலியிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த, தனியார் சுற்றுலா பஸ்ஸுமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வான் ஓட்டுனரான, கிண்ணியா பகுதியை சேர்ந்த ரிஹாஸ் என்னும் இளைஞனும், அவரது அருகில் அமர்ந்து சென்ற, மற்றும் ஒரு கிண்ணியா இளைஞனுமே உயிர் இழந்துள்ளனர்.

மேலும், பஸ்ஸில் பயணித்த 2 பேரும் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி, ஹபரணை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படு காயம் அடைந்த, சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்