எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

by wp_shnn

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நேற்று மத்திய முகாம் நகரில் ஆரம்பமானது

குறித்த நடை பவனியானது சதுர்த்தி வங்கி அருகில் ஆரம்பித்து மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையில் இடம் பெற்றதுடன் எலிக் காய்ச்சல் தொடர்பிலான விழிப்புணர்வு உரையுடன் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அனுசரணையுடன் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ. எம். முஜீப் உள்ளிட்ட ஊழியர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் திரு. பீ. சதீஸ்கரன் உள்ளிட்ட ஊழியர்கள், மத்திய முகாம் பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் இசுரு கொடிகார, நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் அதிகாரிகள், மத்திய முகாம் ஜீ. எம். எம். எஸ். பாடசாலை அதிபர் பிரதி அதிபர் ஆசிரியர்கள் மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்கள், மற்றும் மத்திய முகாம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், அன்னமலை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளும் , பொதுமக்களும் பங்கு கொண்டனர்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கருத்து தெளிவூட்டல் வழங்கப்பட்டமை ஒரு சிறப்பம்சமாகும்.

தொடர்புடைய செய்திகள்