கொழும்பு விகாரைகளில் படையினர் கூலிகளாக?

by adminDev2

வடகிழக்கை தாண்டி கொழும்பிலும் விகாரைகளிற்கு காணிகளை பிடித்து படையினரை கூலிகளாக வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பிரபல விகாரையொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதினெட்;டு ஏக்கர் காணியை அரசாங்கம் 15 வருடங்களுக்கு மேலாக இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தி பராமரிப்பது அம்பலமாகியுள்ளது. தென்னந்தோப்பு காணியை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் படையினரை ஈடுபடுத்தியுள்ளதாக பாராளுமன்ற அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்துள்ளார்

சூரியவெவ பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய காணி அரசியல் தலையீடு காரணமாக சட்டவிரோதமான முறையில் கோவிலுக்கு கையளிக்கப்பட்டு இராணுவத் தலைமையகம் அதன் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்த தென்னை காணியில் என்ன நடக்கிறது என்பது வெளியில் எவருக்கும் தெரியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

காணியின் உரிமை கோவிலுக்கு சட்டப்பூர்வமாக சொந்தமானது அல்ல என்றும், தற்போது இராணுவம் நிறுத்தப்பட்டு அங்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்