இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிணை!

by guasw2

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதேவேளை கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்