1
அண்மையில் இரத்மலானை பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தி, முச்சக்கர வண்டியொன்றை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளை பணிநீக்கம் செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்றதாகவும், அதே நாளில் கல்கிஸை பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஜீப் வாகனத்தை செலுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் மது போதையில் வாகனம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டதோடு, சந்தேக நபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.