மாவையின் மறைவுக்கு சஜித் இரங்கல்

by adminDev

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழரசுக் கட்சிக்கும், தமிழர்களுக்கும் பேரிழப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அன்னாரின் மறைவுச் செய்தி பெரும் மன வேதனையையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த அரசியல்வாதியும், திறமையான பேச்சாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாவை சேனாதிராஜா தனது 19 ஆவது வயதில் அரசியல் பயணத்தை ஆரம்பித்து தனது 83 ஆவது வயது வரை தமிழ் மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்னரும் பின்னரும் அவரது அரசியல் செயற்பாடுகள் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டுள்ளன.

அரசியலின் மீதான அவரது ஆர்வம் அவரை தமிழ் அரசியலில் மிகவும் வெற்றிகரமான மற்றும் மரியாதைக்குரிய தலைவர்களில் ஒருவராகத் திகழச்செய்தது.

தமிழ் அரசியலில் மாத்திரமின்றி தேசிய அரசியலிலும் அசாத்தியமான திறமையும், துணிச்சலும், தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக மாவை சேனாதிராஜா திகழ்ந்தார்.

அத்துடன் தமிழ் மக்களை ஒன்றிணைக்கவும் பொதுவான நிலையைக் கண்டறியவும் முயன்றதுடன், தமிழர் அரசியல் பரப்பில் மாவை ஒரு யதார்த்தவாதியாகத் திகழ்ந்தார்.

அன்னாரின் பிரிவால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்