சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் , தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் : பொது நிர்வாக அமைச்சர் ! on Thursday, January 30, 2025
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்க முடியும் பொது நிர்வாக அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், சுதந்திர தின நிகழ்வுகளுக்காக 80 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டள்ளது. தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்படும் என தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின நிகழ்வில் வாகன அணிவகுப்பு இல்லை. தேசிய கொடியை ஏந்திச் செல்வதற்காக விமானப்படையின் 3 உலங்கு வானூர்திகள் மாத்திரம் பயன்படுத்தப்படும். மரியாதை அணி வகுப்புக்களில் பங்கேற்கும் படைவீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், முப்படைகள், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் 4,421 வீரர்கள் மரியாதை அணிவகுப்புக்களில் பங்கேற்பர் என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.