2
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகளை செலவுகளை கட்டுப்படுத்தும் வகையிலும் இம்முறை சுதந்திர தினநிகழ்வை நடத்த எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.
இராணுவ அணிவகுப்பு 1873 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 1511 இராணுவ உறுப்பினர்களினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு முப்படைகளின் கவச வாகனங்கள் பயன்படுத்தப்படாது என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
கடந்த முறை பயன்படுத்தப்பட்ட 19 விமானங்களில் இந்த முறை சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு 3 விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.