எனக்கு இல்லை:சுமந்திரனிற்கு இருக்கின்றது-அருச்சுனா!

by wamdiness

தற்போதைய அரசாங்கம் அரசியல் பழிவாங்களை மாத்திரமே மேற்கொண்டு வருகின்றது.எனக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை, என் பாதுகாப்பிற்காக விஐபி விளக்குகளை நான் பயன்படுத்தியமை தவறு என தெரிவிக்கின்றனர்.ஆனால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்குஇரு பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கப்பட்டிருக்கின்றனரென நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாளை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின்போது போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், வட மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், போராட்டம் நடத்துவதை தடை செய்யக் கோரி காவல்துறையினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (29) மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அருச்சுனா தடை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், அவ்வாறான போராட்டமொன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நான் யாழ் மக்களுக்கு ஆதவளிப்பதாகதான் தெரிவித்திருந்தேன்.

நான் போராட்டத்தை முன்னெடுக்க அழைப்பு விடுக்கவில்லை.எனக்கான பாதுகாப்பிற்காக கோரிக்கை முன்வைக்க கண்டுகொள்ளாத அரசு தமிழரசுக் கட்சியை உடைத்தவரும் நரித்தனமான அரசியலுக்கு துணைபோவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வழங்குகின்றது. இதை நினைத்து நான் மிகவும் வெட்கப்படுகின்றேன்” என அருச்சுனா தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்