இலங்கை போக்குவரத்து சபை தலைவர் இராஜினாமா!

by 9vbzz1

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், நியமிக்கப்பட்டு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குள் இராஜினாமா செய்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் செனேஷ் திஸாநாயக்கவும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Ramal SiriwardenaSLTBரமால் சிறிவர்தன

தொடர்புடைய செய்திகள்