இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 16 பேர் காயம்!

by adminDev

ஹபரணை – மின்னேரிய வீதியின் 7 வது மைல் பகுதிக்கு அருகில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் குறைந்தது 16 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் இன்று புதன்கிழ (29) முற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (SLTB) தனியார் பேருந்து மற்றும் பயணிகள் பேருந்தும் ஒன்றும் மோதியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த 12 பேரும், தனியார் பேருந்தில் பயணித்த 4 பேரும் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹபரணை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் இரு பேருந்துகளின் சாரதிகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து சிறிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்குக்காக தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. 

சம்பவத்தின் போது தனியார் பேருந்தின் சாரதி கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்