by sakana1

நில்வள கங்கை அபிவிருத்தி குறித்து அமைச்சர் ஆய்வு கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி நில்வள நதியை சுற்றுலா மற்றும் போக்குவரத்து நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, நில்வள ஆற்றின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் அவர் தலைமையிலான மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றங்கரையோரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குக்கு விரைவான தீர்வு காண்பது குறித்தும் இந்த விஜயம் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்