by wp_shnn

சீன தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டீப்சீக் (DeepSeek) தொழில்நுட்ப நிறுவனம் ஒரு விழிதெழுவதற்கான அழைப்பு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம் தெரிவித்துள்ளார்.

டீப்சீக் என்பது சீனாவின்  தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் செயற்கை தொழில்நுட்பத்தில் இயங்கும் சாட்போட் ஜனவரி மாதம் அமெரிக்காவில் வெளியானது. டீப்சீக் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திலேயே அமெரிக்காவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இலவச செயலியாக மாறியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது திடீரென பிரபலம் மற்றும் குறைந்த செலவு ஆகியவற்றால் நியூயோர்க் பங்குச் சந்தையை கதிகலங்க வைத்துள்ளது.

செயற்கை தொழில் நுட்பத்தில் டீப்சீக் மிகவும் அற்புதமான மற்றும் ஈர்க்கக்கூடிய முன்னேற்றங்களில்  ஒன்று என சிலிக்கான் வேலி துணிகர முதலீட்டாளர் மார்க் ஆண்ட்ரீசென் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் செயற்கை தொழில்நுட்பத்திற்கு முன்னணி மாதிரியாகவுள்ள அமெரிக்காவின் ChatGPT  க்கு இணையாக குறைந்த செலவில் டீப்சீக் செயற்கை தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீப்சீக் செயற்கை தொழில்நுட்பத்தை உருவாக்க 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே செலவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது அமெரிக்காவில் செயற்கை தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவழித்த பில்லியன்களை விட மிகக் குறைவு ஆகும்.

இது குறித்து என  ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஊடகவியலாளரிடம் டொனால்ட்  ட்ரம் கருத்து  தெரிவிக்கையில்,

சீனாவின் செயற்கை தொழில்நுட்ப துறையின் அண்மைய முன்னேற்றங்கள் அமெரிக்காவிற்கு “சாதகமாக” இருக்கலாம்.

“நீங்கள் அதை மலிவாக செய்ய முடிந்தால், நீங்கள் அதை [குறைவாக] செய்தால் [மற்றும்] அதே பலனைப் பெற முடியும். அது எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்,”

இந்த முன்னேற்றம் குறித்து தனக்கு கவலை இல்லை, இந்த துறையில் அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் வீரராக இருக்கும் என  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்