இலங்கை தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா இன்றிரவு மருத்துவ சிகிச்சை பயனளிக்காத நிலையில் மரணித்துள்ளார்.
யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர்பிரிந்தமையினை அவரது குடும்பத்தவர்கள் இன்றிரவு உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்.
நேற்று முன்தினம் வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்த அவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வீழ்ந்ததில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நேற்று தகவல் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே யாழ்.போதனா வைத்தியாசாலை பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பினில்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு மாவை சேனாதிராஜா அவர்கள் சிகிச்சை பலனின்றி இறைவனடி சேர்ந்ததை ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
பல்வேறு தரப்பினரின் தொடர்ச்சியான தொடர்புகளுக்கமைவாக இச்செய்தியை வெளியிடுகிறோம்.
நன்றி,
யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகம்.