தனியார் பேருந்தில் பயணிகளிடமிருந்து பணம் பெறுவதற்காக நடத்துனரின் வித்தியாசமான நடத்தை ! on Wednesday, January 29, 2025
கிளிநொச்சியிலிருந்து முகமாலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் ஏற்பட்ட அதிக சன நெரிசலுடன் பயணிகளிடமிருந்து பணம் பெறுவதற்காக நடத்துனர் பின்பற்றிய முறையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
குறித்த தனியார் பேருந்து செவ்வாய்க்கிழமை (28) அன்று கிளிநொச்சியில் இருந்து முகமாலை நோக்கி பயணித்த நிலையில், இதில் அதிகளவான பயணிகள் இருந்ததால், நடத்துனர் பணம் பெறுவதற்காக பேருந்தின் இருக்கைகளுக்கு மேல் ஏறி பயணித்துள்ளார்.
நடத்துனரின் இந்த நடத்தையால் , இருக்கைகளில் அமர்ந்திருந்த பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேலும், தனியார் பேருந்துகளில் அதிகளவான பயணிகளை ஏற்றிச் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றதுடன் அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.