அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் – உணவக உரிமையாளர்கள் சங்கம் ! on Tuesday, January 28, 2025
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி, உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் என்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் கேட்டுள்ளது.
சந்தையில் தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான விலைகள் அதிகரித்துள்ளன.இதனால் இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான உணவுகளுக்கு தேங்காய் அவசிய பயன்பாடாக காணப்படுவதாகச் சுட்டிக் காட்டியுள்ள அந்த சங்கம், தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதுடன் சில இடங்களில் அதிக விலைக்கும் தேங்காயைக் கொள்வனவு செய்ய முடியாதுள்ளதாகவும் அந்தக சங்கம் தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.