by sakana1

கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர் என எடுத்துச் சென்ற மக்கள் ! on Tuesday, January 28, 2025

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (28) நீர் கசிந்துள்ளதாக அப் பிரதேச மக்கள் கருதுகின்றனர் 

சம்பவம் அறிந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் இயேசுவின் காலில் இருந்து வடிந்தோடிய நீரை எடுத்துச் சென்றனர்.

பொது மக்கள்  பலர் இந்த காட்சியை பார்வையிட்டதுடன் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றனர்.

சம்பவம் தொடர்பாக ஆலய பங்குத்தந்தையால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியுமென கப்பலேந்தி மாதா ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்