2
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இளைஞனை 78 மணிநேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய யாழ் . நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் , இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுளளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்தி , இளைஞனை பொலிஸ் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்க அனுமதிக்க கோரி மன்றில் விண்ணப்பம் செய்தனர்
பொலிசரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மன்று , இளைஞனை 78 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதித்தது.