மாவை தொடர்ந்தும் அபாய கட்டத்தில்!

by sakana1

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் அபாயகட்டத்திலுள்ளதாக கூறப்படுகின்றது.

வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மாவை சேனாதிராஜா அவர்கள் யாழ்.போதனாவைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர். 

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்