மதுபோதையில் வாகனம் செலுத்திய உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல் ! on Tuesday, January 28, 2025
மதுபோதையில் வாகனத்தைச் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தி நபரொருவரை காயப்படுத்தியதாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
கேகாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 26 ஆம் திகதி கேகாலை – வரக்காப்பொல பிரதேசத்தில் மதுபோதையில் கெப் வாகனம் ஒன்றைச் செலுத்திச் சென்றுள்ள நிலையில் வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றை மோதி விபத்தினை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த விபத்தின் போது நபரொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகரை கைது செய்து நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.