அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அவருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்ட நீதித்துறை சட்டத்தரணிகளை பணிநீக்கம் செய்துள்ளது.
பதவி நீக்கமானது திங்கட்கிழமை (27) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் இவர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதால், ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை நம்பிக்கைத் தன்மையாக செயல்படுத்துவதை நம்ப முடியாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதை அடுத்து சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக செயல் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்ஹென்றி சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டத்தரணிகள் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித்தின் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர்.
இந்தக் குழு ட்ரம்பின் இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதுடன், 2020 தேர்தல் தோல்வியை முறியடிக்க அவர் செய்ததாகக் கூறப்படும் முயற்சி மீதான விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
ட்ரம்ப் மீதான இரண்டு நீதித்துறை வழக்குகளை மேற்பார்வையிட ஜாக் ஸ்மித் 2022 இல் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற இரண்டு வினாடிகளுக்குள் அவரை பதவி நீக்கம் செய்வதாக ஜனாதிபதி சபதம் செய்திருந்தார்.
எனினும், ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே ஜாக் ஸ்மித் பதவி விலகினார்.
இரண்டு வழக்குகளும் ட்ரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை விளைவித்தன.
எனினும், 2024 நவம்பர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வழக்குகள் முடக்கப்பட்டன.
நீதித்துறை விதிமுறைகளின் படி, ஒரு பதவியில் இருக்கும் ஜனாதிபதியை வழக்குத் தொடர அனுமதிக்காது என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.
எவ்வாறெனினும் ஸ்மித்தின் குழுவிலிருந்து பதவி நீக்கப்பட்டவர்கள் யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.