சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் !

by adminDev2

சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் ! on Tuesday, January 28, 2025

சட்டவிரோதமாக நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள 20 கோடி ரூபா பெறுமதியுள்ள பொருட்களை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. விலையுயர்ந்த வாசனைப் பொருட்கள்,சொக்கலேட் வகைகள் பாதணிகள் உள்ளிட்ட பொருட்களே இவ்வாறு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.மலேசியா மற்றும் துபாய் ஆகிய நாடுகளிலிருந்து இப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பல்வேறு பிரதேசங்களிலுமுள்ள முகவரிகளுக்கு இந்த பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த முகவரிகளில் பெரும்பாலானவை போலியானவை என்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்