by smngrx01

மாடு மேய்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குள காட்டுப் பாதையில் மாடு மேய்க்கச் சென்ற 19 வயது இளைஞன் ஒருவர்  திங்கட்கிழமை (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

வட்டவான் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஜீவேந்திரன் சினேஜன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுடன் 3 பேர்   ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்றுள்ள நிலையில் சம்பவ தினமான திங்கட்கிழமை  மலம் கழிக்க சென்ற நிலையில் அவர் அங்கு விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்