by smngrx01

நகரங்களில் காற்றின் தரம் குறித்து வௌியான அறிக்கை நாட்டை சுற்றியுள்ள 6 நகரங்கள் மற்றும் பிரதேசங்களில் காற்றின் தர நிலை சற்று மோசமான நிலையை எட்டியுள்ளது.

யாழ்ப்பாண நகரம், கொழும்பு நகரம், காலி கரப்பிட்டி, திருகோணமலை நகரம், பொலன்னறுவை நகரம் மற்றும் அனுராதபுரம் நகரங்களில் இவ்வாறு காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றின் தரக் குறியீடு (SL AQI) 0 முதல் 50 வரை இருந்தால் சாதகமானது என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் மிதமானது என்றும் கருதப்படுகிறது.

இருப்பினும், 101 – 150 க்கு இடைப்பட்ட மதிப்பு சற்று சாதகமற்றதாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் 151 – 200 க்கு இடைப்பட்ட மதிப்பு சாதகமற்ற மட்டமாகக் கருதப்படுகிறது.

கொழும்பு நகரில் நேற்று காற்றின் தரக் குறியீடு 66 ஆக இருந்த நிலையில், இன்று அது 100 முதல் 108 வரை அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாண நகரில் நேற்று காற்றின் தரக் குறியீடு 62 ஆக இருந்த நிலையில், இன்று 104 முதல் 112 வரை அதிகரித்துள்ளது.

இதேபோல், காலியின் கராபிட்டிய பகுதியில் காற்றின் தரக் குறியீடு நேற்று 68 ஆக இருந்த நிலையில், இன்று 98 முதல் 106 வரை அதிகரித்துள்ளது.

திருகோணமலை நகரில் நேற்று காற்றின் தரக் குறியீடு 69 ஆக இருந்த நிலையில், இன்று அது 104 முதல் 112 வரை அதிகரித்துள்ளது.

பொலன்னறுவை நகரில் காற்றின் தரம் 110-118 ஆகவும், அனுராதபுரம் நகரில் காற்றின் தரம் 100-108 ஆகவும் இருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த காற்றின் தர நிலைமைகள் காரணமாக உணர்திறன் உள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை வலியுறுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்