2
முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ, குறைக்கவோ முடியாது – கம்மன்பில ! on Monday, January 27, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் குறிப்பிட்டதைப் போன்று அரசியலமைப்பின் 36 (2) உறுப்புரையின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை இரத்துச் செய்யவோ அல்லது கொடுப்பனவு தொகையை குறைக்கவோ முடியாது.
போலியான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அரசியலமைப்பையும் அரசாங்கம் மீறியுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.