by smngrx01

‘ஸ்டார்கேட்’டால் வந்த வம்பு! – ட்ரம்ப் கருத்துக்கு மஸ்க் எதிர்வினை xxzxஅமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மேம்பாட்டுக்காக 500 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார். ‘ஸ்டார்கேட்’ எனும் இந்தத் திட்டத்தில் ஆரக்கிள், சாப்ட்பேங்க், ஓப்பன் ஏஐ, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரு நிறுவனங்கள் பங்குதாரர்களாக இணைந்து செயல்பட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

வழக்கமாக ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவிடும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ‘ஸ்டார்கேட்’டை நடைமுறைப்படுத்த நிறுவனங்களிடம் போதுமான நிதி இல்லை என விமர்சித்தார். மஸ்க்கின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்துள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனர் சத்யா நாதெள்ளா “80 பில்லியன் டாலர் முதலீடு செய்வதில் மைக்ரோசாஃப்ட்டுக்கு எந்தச் சிக்கலும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ‘ஸ்டார்கேட்’ குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. ட்ரம்ப்பின் கருத்து ஒன்றுக்கு மஸ்க் எதிர்வினை ஆற்றியிருப்பதால், ‘இனி என்ன நடக்கப்போகிறதோ’ எனவும் ‘மஸ்க் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முதலீட்டைத்தான் கேள்வி எழுப்பினார், ‘ஸ்டார்கேட்’ திட்டத்தை அல்ல’ எனவும் நெட்டிசன்கள் வெவ்வேறு விளக்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர். நடக்கப்போவது என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். – மார்க்கி

தொடர்புடைய செய்திகள்