1
விகாரை ஒன்றில் புதையல் தோண்டிய தேரர் ஒருவர் உட்பட மூவர் கைது ! on Monday, January 27, 2025
தீகவாபி வெஹரகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் சட்டவிரோதமாக புதையல் அகழ்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தேரர் ஒருவர் உட்பட மூன்று பேர் எரகம பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தேரர் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வருபவர் எனவும் ஏனைய சந்தேக நபர்கள் குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.