பொதுவாகவே பிரதோஷ நாள் என்றால் நாம் எல்லோரும் சிவன் வழிபாடு செய்வதை தான் வழக்கமாக வைத்திருக்கின்றோம்.
பிரதோஷம் என்றால் கட்டாயம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.
சிவன் வழிபாட்டை செய்யும் போது கூடவே வாய்ப்பு உள்ளவர்கள் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியையும் வழிபாடு செய்து பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கடுமையான கஷ்டங்களுக்கு அன்றே ஒரு விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்றால், பிரதோஷ நேரத்தில் நரசிம்மர் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நரசிம்மருக்கு நாளை என்ற வார்த்தை கிடையாது. இப்போதே நீங்கள் கேட்ட வரத்தை கொடுக்கக்கூடிய தெய்வம் நரசிம்மர்.
ஏனென்றால் நரசிம்மர் அவதாரம் ஒரு நொடி பொழுதில் இந்த பூமியில் உருவானது.
நரசிம்மரை வழிபாடு செய்ய வேண்டும் என்றால், நம்முடைய மனதில் எந்த கெட்ட எண்ணமும் இருக்கக் கூடாது.
அவருக்கு உகந்த நெய்வேதியம், பானகம். நீர் மோர் பானகம் தயார் செய்து நரசிம்மருக்கு நெய்வேத்தியம் வைத்து, நரசிம்மர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு சின்ன கப்பில் அந்த பாதகத்தை ஊற்றி பிரசாதமாக கொடுக்க வேண்டும்.
உடம்பை குளிர்விக்க கூடிய பானகம் இது. உங்களுடைய கஷ்டத்தை குளிர்விக்க கூடிய பானம் இது.
கோபமாக இருக்கும் நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்தக்கூடிய பானகம் இது. கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரில் வெல்லம், சுக்குத்தூள், எலுமிச்ச பழச்சாறு, ஏலக்காய் பொடி, போட்டு நன்றாக கலந்தால் வாசம் நிறைந்த பானகம் தயார்.
இதை கொஞ்சம் கூடுதலான அளவில் செய்து கோவிலுக்கு கொண்டு போய் பக்தர்களுக்கு உங்கள் கையாலேயே இந்த பாநகத்தை விநியோகம் செய்ய வேண்டும்.
இந்த தை மாதத்தின் பிரதோஷம் 27-1-2025 திங்கட்கிழமை அன்று வந்திருக்கிறது.
இந்த நாளில் மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரைக்குள் இருக்கக்கூடிய நேரத்தில் உங்கள் வீட்டு பக்கத்தில் நரசிம்ம மூர்த்தி கோவில் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்ற இந்த பானகத்தை பக்தர்களுக்கு தானமாக கொடுங்கள்.
கோவிலுக்கு செல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. வீதியில் காய்கறி விற்பவர்கள், செருப்பு தைப்பவர்கள், பழங்கள் விற்பவர்கள், என்று, வெயிலில் உழைக்கக்கூடிய உழைப்பாளிகளுக்கு உங்கள் கையால் பானகம் தானம் செய்தாலும், கடன் குறையும்.
வெயிலில் கஷ்டப்பட்டு வேலை செய்பவர்கள் குளிர்ந்த பானகத்தை குடித்துவிட்டு, மனதார வாழ்த்தும்போது உங்கள் கஷ்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.