திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது

by guasw2

திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் போதைப்பொருளுடன் கைது on Monday, January 27, 2025

பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் போதைப்பொருளுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 14 பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுயைடவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 700 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் திருடப்பட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்