காலி சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
காலி சிறைச்சாலையில் நேற்று இரு குழுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இம்போதலில் நான்கு கைதிகள் காயமடைந்துள்ளனர் எனவும், அவர்களில் இருவர் காலி தேசிய வைத்தியசாலையிலும் ஏனைய இருவர் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹங்கல்ல லோக்கு பெட்டி மற்றும் கரந்தெனிய சுத்தா ஆகிய இரு குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் இன்றையதினம் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான காமினி பீ.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.