ஜானிக் சின்னர் ஞாயிற்றுக்கிழமை (26) தனது இரண்டாவது தொடர்ச்சியான அவுஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றினார்.
மெல்போர்ன் ராட் லேவர் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில், தனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகின் நம்பர் 2 வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை 6-3, 7-6 (4), 6-3 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
23 வயதான இத்தாலியரான சின்னர், 1992-93 இல் ஜிம் கூரியருக்குப் பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்துடன் மெல்போர்ன் பூங்காவை விட்டு வெளியேறிய இளைய வீரர் ஆவார்.
கடந்த ஜூன் மாதத்தில் சின்னர் உலகின் நம்பர் 1 வீரர் என்ற நிலகை்கு உயர்ந்தார். பின்னர், அவர் ஒவ்வொரு வாரமும் தொடர்ச்சியாக தனது நிலையை தக்க வைத்துக் கொண்டார்.
2019 ஆம் ஆண்டு முதல் தரவரிசையில் 1 ஆவது மற்றும் 2 ஆவது இடத்தில் இருக்கும் ஆண்களுக்கு இடையே நடைபெற்ற முதல் அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டி இதுவாகும்.
2019 ஆம் ஆண்டு நம்பர் 1 இடத்தலிருந்த நோவக் ஜோகோவிச் 2 ஆம் நிலை வீரரான ரஃபேல் நடால் 6-3, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்திருந்தார்.
கடந்த செப்டம்பரில் நடந்த அமெரிக்க ஓபன் உட்பட ஐந்து பெரிய போட்டிகளில் மூன்றை இத்தாலிய வீரர் ஜானிக் சின்னர் வென்றுள்ளார்.
இதேவேளை சனிக்கிழமை (25) நடைபெற்ற மகளிருக்கான அவுஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மேடிசன் கீஸ், மூன்று பரபரப்பான செட்களில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான அரிசான சபலெங்காவை வீழ்த்தி சம்பியன் ஆனார்.
29 வயதான அமெரிக்க வீராங்கனை அவுஸ்திரேலிய ஓபனில் பெறும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.
19 ஆம் நிலை வீராங்கனையான கீஸ், இரண்டு முறை நடப்புச் சாம்பியனான சபாலெங்காவுடன் மோதலில் ஒரு பெரிய பின்தங்கியவராக இருந்தார்.
எனினும், அவர் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக 6-3, 2-6, 7-5 என்ற பெலருஷ்ய வீராங்கனையை வீழ்த்தி சம்பியன் ஆனமையும் குறிப்பிடத்தக்கது.