காணொளிக் குறிப்பு, பொருட்களின் பெயரை கூறினால் போதும்; சரியாக எடுத்துவரும் புத்திசாலி நாய்

200 பொருட்களின் பெயர் தெரிந்த புத்திசாலி நாய்

இந்நாய்க்கு 200க்கும் மேலான வார்த்தைகள் தெரியும் என்கிறார் உரிமையாளர் இசபெல்லா.

ஷீப்டாக் இனத்தின் பார்டர் கோலிஸ் வகையை சேர்ந்த இந்நாய் பொதுவாக கால்நடைகளை மேய்க்க பயன்படுத்தப்படுகிறது.

பார்டர் கோலிஸ் நாய்கள் அதன் புத்திக்கூர்மைக்காக அறியப்படுகின்றன.

ஹங்கேரி நாட்டின் புடபெஸ்ட் நகரில் உள்ள இயோட்வோஸ் பல்கலை. ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுவதிலும் கயா போன்று, பொருட்களின் பெயர்களை அறியும் அரிய திறனுடைய 41 நாய்களை அடையாளம் கண்டுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு