by smngrx01

தொடர்ச்சியாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக பீடாதிபதி பதவி விலகல் ! on Sunday, January 26, 2025

கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி ரகுராம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் கோரிக்கைகளில், விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை நிறுத்துதல், கருத்து வெளிப்பாடு மற்றும் போராட்ட உரிமைகளை உறுதி செய்தல், விரிவுரையாளர்களின் முறைகேடுகளை பாரபட்சமின்றி விசாரணை செய்தல், மற்றும் கல்வி சுதந்திரத்திற்கான உடனடி நிவாரணம் வழங்குதல் அடங்கும்.

குற்றமற்ற மாணவர்கள் மீது தண்டனைகள் விதிக்கப்பட்டதன் எதிர்ப்பாகவும், நிர்வாகத்தின் தவறுகளுக்கு நீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதனை அடுத்து கலை பீட பீடாதிபதி ரகுராம் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்