மின்கம்பம் இரண்டாக உடைந்து 3 ஊழியர்கள் படுகாயம் !

by admin

on Sunday, January 26, 2025

By Shana

No comments

மின் கம்பம் ஒன்று இரண்டாக உடைந்து விழுந்து எம்பிலிப்பிடிய செவனகல மின்சார சபை ஊழியர்கள் மூவர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் காலி கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் கம்பம் ஒன்றில் ஏறி நின்று மின்வயர்களை  பொருத்திக்  கொண்டு இருந்தபோது இந்த மின்கம்பம் நடுவில் உடைந்து உடைந்ததால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த மின்கம்பங்கள் தரம் குறைந்ததாக உள்ளதால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக மின்சார சபை ஊழியர்கள் முறையிடுகின்றனர்.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்