காலி சிறையில் மோதல்: நால்வர் மருத்துவமனையில்!

by smngrx01

காலி சிறைச்சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற மோதலில் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

காயமடைந்த நான்கு கைதிகளும் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க, கட்டுப்பாட்டை மீறிய வாக்குவாதம் காரணமாக மோதல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதன்படி, சிறைச்சாலையின் வெளிப்புற சுற்றுவட்டத்தில் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்