யோஷித்த ராஜபக்ஷ கைது!

by smngrx01

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (25) காலை பெலியத்த பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச குற்றங்களைச் செய்துள்ளார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்படி, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரம், மேலதிக சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கதிர்காமத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனவரி 3ஆம் திகதி யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஆஜராகியிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்